+ஹோலி+

*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*
*வருடம்முழுவதும் ஹோலி கொண்டாடும்
*எங்கள் வீட்டுச் சுவர்
*எங்கெங்கும் குழந்தையின் பலவண்ணக் கிறுக்கல்கள்
*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*
**ஹோலி வந்தாலே ஏழைக்கு மகிழ்ச்சி
**அவனைப்போலவே அழுக்குச்சட்டையுடன்
**பலரும் சாலையில்..
*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*
***நான்கு நிலாவை
***பல வண்ணத்தில் பகலில் கண்டான்
***ஹோலியில் பாங்க் அருந்தியவன்..
*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*
****ஹோலியால் குழந்தைகள் ஜாலி
****அம்மாக்கள் காலி
****அழுக்குத்துணி அதிகமாகி விடுமே..!!
*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*
*****வெண்ணிற உடையில்
*****நாம் எழுத்து மை பூசுவதால்
*****அடிக்கடி ஹோலி கொண்டாடுகிறது தாள்!!***
*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*
******மாட்டுப்பொங்கலன்றே
******தமிழகத்தில் மாடுகள்
******ஹோலி கொண்டாடி விடுகிறது...!!
*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*
*******ஹோலியன்று
*******வண்ணத்திலிருந்து தப்பிப்பவர்கள்
*******சீருடையாளர்கள் மட்டுமே..
*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*
********வான் நகரில்
********ஹோலிப்பண்டிகை
********வானவில்...!!!
*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Mar-14, 12:05 am)
பார்வை : 331

மேலே