தாமரை நெஞ்சோடு

அயோத்தியின்
இளமங்கையர்
தாமரைக் கண்ணால்
இராமனை
நோக்கியது போல்

பெரு மழையில்
நிரம்பிய அணைகளை
கர்நாடகம்
தாம்+அரை நெஞ்சோடு
திறந்து விட்டதில்

வந்தடைந்தாள்
காவிரி அன்னை
தமிழக மண்ணுக்கு
மக்களின்
துயர் துடைக்க.

எழுதியவர் : கோ.கணபதி (19-Mar-14, 4:21 pm)
Tanglish : thamarai nenjodu
பார்வை : 55

மேலே