அவள்

நட்டு வச்ச பூச்செடி மாதிரி
பொட்டு வச்சு வந்தா...

பட்டு போன என் நெஞ்ச
தொட்டு விட்டு போறா...

காத்தாடி ஆச்சு மனசு
அதுல கலகலத்து போனது உசிரு

நேத்து கூட நல்லா இருந்தேன்
இவள பாத்தபின்னே கண்ண இழந்தேன்

எழுத்தெல்லாம் கவியாச்சு
படிப்பெல்லாம் பாழாச்சு

பொட்டபுள்ள கண்ண பாத்து - தேகம்
வைக்கோலு பொம்ம யாச்சு

மனசு கிடந்து தவிக்குதடி
மா விளக்கு நீ , நடக்கையில

எ வீட்டு விளக்கு காத்திருக்கு
எப்ப நீ பொருத்தி வப்ப

காத்திருக்கிறேன் கவிகளோடு
க நிலவன் .

எழுதியவர் : க நிலவன் (19-Mar-14, 4:59 pm)
Tanglish : aval
பார்வை : 120

மேலே