வெட்கம்

குழந்தைப் பருவத்தில்
இரு கைகள் கொண்டு
முகத்தை மூடும்-உனது
வெட்கத்தில்...

பள்ளிப் பருவத்தில்
கையை உதறிக் கொண்டு
வாயில் விரல்
கடிக்கும்-உனது
வெட்கத்தில்...

கல்லூரி பருவத்தில்
மெலிதாய் புன்னகைத்து
முன் நெற்றியில்
படர்ந்த ஒன்றிரண்டு
முடியை கோதியும்
சில சமயம்-பகுதி
முகத்தை மூடி
தலையை வேறு திசை
திருப்பும்-உனது
வெட்கத்தில்....

தாவணிப் பருவத்தில்
ஒற்றைப் பல்லால்
கீழுதட்டைக்
கடித்து கடித்து
காலின் பெருவிரலால்
புது புது
கோலங்கள் போட்டு
ஒற்றை விரல் வைத்து
தாவணியில்
முடிச்சு போடும்-உனது
வெட்கத்தில்...

சேலைப் பருவத்தில்
வெட்கத்தை மறைக்க
நீ படும்
கஷ்டத்தில்...

கூழாங்கற்கள் எல்லாம்
கரைகின்றன
புது புது
சிற்பங்களாக !...

கிறுக்கல்கள் எல்லாம்
மாறுகின்றன
புது புது
சித்திரங்களாக !...

வார்த்தைகள் எல்லாம்
மாறுகின்றன
புது புது
கவிதைகளாக !...

எழுதியவர் : அந்தோனி சுரேந்தர் (19-Mar-14, 5:12 pm)
Tanglish : vetkkam
பார்வை : 293

மேலே