மக்களுக்கு எதிரி மக்களே

தொண்டன் : தலைவருக்கு கொஞ்சம் கூட பொது அறிவே இல்லாமப் போச்சு!
மற்றவன் : ஏன்?என்னாச்சு?
தொண்டன் : நேத்து மேடையில பேசும்போது தேர்தல் வாக்குறுதியாக "இந்தியாவுல இருந்து சைனாவுக்கு ரோடு" போட்டு தருவோம்னு சொல்லிட்டார்.கூட்டத்துல ஒரே சலசலப்பு.... அவமானமாப் போச்சு...
மற்றவன் : ம்ம்.... அப்புறம்...?
தொண்டன் : அப்புறம் என்ன... நான் போயி தலைவர் காதுல, "தலைவரே! கடல்ல ரோடெல்லாம் போடமுடியாது... பேசாம பாலம் கட்டி தர்றதா சொல்லிடுங்கன்னு" சொன்னேன்., அதுக்கப்புறம் பாத்தா மக்கள் மகிழ்ச்சியில,ஒரே கரகோஷம் எழுப்பி தலைவர சந்தோசப்படுத்திட்டாங்க.....
மற்றவன் : ம்ஹூம்...நாடு உருப்புட்டாப்புலதான்.. உங்களையெல்லாம் சொல்லி குற்றமில்லை.... கேட்டுட்டு கைய தட்டுனான் பாரு அந்த மக்களைச் சொல்லனும்....