திருடனாய்ப் பார்த்து திருந்தலேன்னா
(திருட்டுக் கூட்டத்தில்.....)
கேடி : தலைவா....நம்ம கபாலி இடி விழுந்தா மாதிரி மயங்கிக் கிடக்குறான்...என்னான்னு வந்து பாருங்க....
தலைவன் : டேய் கபாலி...டேய்...டேய்... எந்திரிடா...என்னடா ஆச்சு உனக்கு...டேய்....
கபாலி : (அழுதுக் கொண்டே..) அண்ணே..... நாம மோசம் போய்டோம்னே...மோசம் போய்டோம்னே...
தலைவன் : ஏண்டா என்னடா ஆச்சு...?
கபாலி : அண்ணே....நாம 10 லட்சம் திருடிட்டு வந்து 2 நாள் கூட ஆகல...அதுக்குள்ளே கவர்ன்மெண்டு
1 வாரத்துக்குள்ள பழைய நோட்டெல்லாம் மாத்தச் சொல்லியிருக்கு....என்ன செய்யுறதுனே தெரியலைண்ணே.....
தலைவன் : அடப் போடா பைத்தியக்காரா...இதுக்கு போயா கவலைப்படுற....
கபாலி : என்னண்ணே சொல்ற..?
தலைவன் : ஒரு பெரிய அரசியல்வாதியை கடத்திட்டு போயி சட்டத்தை மாத்தச் சொன்னா மாத்திடப் போறாங்க... இதுக்கு போயி சின்ன புள்ளையாட்டம் அழுதுகிட்டு இருக்குற...போடா..போடா...போயி மூஞ்சிய கழுவு...
கபாலி : அண்ணே....இப்பத்தான் நீ என் வயித்துல பால வார்த்துட்ட.....தலைவன்னா சும்மாவா...