காதலுடன் காத்திருக்கிறேன்
![](https://eluthu.com/images/loading.gif)
விழி மூட மறந்த நானும்
உன் வருகையரியவே
காத்திருக்கிறேன்...
தனிமையில் பூத்திருக்கிறேன்
நீ வரும் பாதை நோக்கிய
எனது விழிகள் ஏனோ !!
உன்னை கானது வேறொன்றும்
காண மறுக்கின்றது
என்னை இங்கு வரச்செய்த
தலைவனே எங்கு சென்றாய்
தனிமை நீ இல்லாது இங்கு
என்னை வதைதிக்கிறது
பாறை மீது அமர்ந்தே
பாதையின் வழிகளிடையே
பார்வைகள் மேய்ந்திருக்க
பார்த்திருக்கிறேன்
திண்ணமாய் வந்துவிடு
தனிமை துயில் கலைத்திடவே
தத்தளிக்கின்ற ஏக்கத்தின்
தாகம் தீர்த்திடவே