கூற்று
பெற்றோரின் கூற்று!
உன்னை நான் மறக்க வேண்டும்
அப்படியாயின் உதிக்கின்ற வெய்யோனை
ஒரு நாழி நிறுத்தச்சொல்.
ஏனெனில், நம் காதல்
அக்கதிரவனை விட பெரியது.
உதயம் ஒரு நாழி தடைபடின்
ஏற்படும் விளைவுகள்
பற்பலவாயின் - உன்னை,
முழுதும் மறக்கும்போது
என் மனநிலை யாதோ....