நகைச்சுவை 089

டில்லியிலிருந்து அம்ரித்சர் போகும் இரயிலில் பயணம் செய்த ஒரு சர்தார்ஜி டிக்கட் பரிசோதகரை அணுகி,

"சார் .. காலை 4 மணிக்கு லூதியான இரயில் நிலையம் வந்ததும் என்னை எழுப்பிவிட்டு விடுங்கள். ஒருவேளை நான் நல்ல உறக்கத்தில் இருந்தாலும் சரி .. என்னை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு விடுங்கள்" என்று பலமுறைகள் சொல்லிச் சென்று உறங்கி விட்டான்.

காலை 8 மணியளவில் உறங்கி எழுந்து சர்தார்ஜி பார்த்த பொழுது அம்ரித்சர் வந்துவிட்டது.

வெகுண்டெழுந்து சர்தார்ஜி டிக்கட் பரிசோதகரை கன்னாபின்னா வென்று திட்டிக்கொண்டிருந்தான்.
ஆனால் பரிசோதகரோ ஒன்றும் சொல்லாமல் இருக்கவே, அதைக் பார்த்த மற்றொரு பயணி அவரிடம், "உங்களை கண்டபடி கெட்ட கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டுகிறானே, நீங்கள் ஏன் பதிலொன்றும் சொல்லாமல் நிற்கிறீர்கள்" என்று கேட்கவும், அவர், "இவர் இவ்வளவு திட்டுகிறார் என்றால் நான் யாரை வலுக்கட்டாயமாக லூதியானாவில் இறக்கி விட்டேனோ அவன் எப்படியெல்லாம் திட்டியிருப்பன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்" என்றார்.

எழுதியவர் : (22-Mar-14, 9:52 pm)
பார்வை : 162

சிறந்த நகைச்சுவைகள்

மேலே