குறி 1
மரணத்தின் விளிம்பு தொட்டு
பிறப்பின் கூர் தீட்டுதல்!!....
கரணம் தப்பினாலும்
கரணம் தப்பாவிட்டாலும்
மரணம் மக்களுக்கே - தேர்தல்
சாவகாசமாய் அவகாசம் கேட்கிறது -மழை
தன் பிழைக்காக!!....
தன் பிழைப்பு தேடி
அலைகிறது உழைப்பு!!....
தேனீ கொட்டியது போல இருந்தது
ஓட்டு போட்டு விரலில் இட்ட
கரு(வெறு)மை!!....

