நட்பு பிறந்தது

நட்பு பிறந்தது
நாளும் வளர்ந்தது
நன்மை செய்தது
நாட்டம் வந்தது .....!!!

அன்பு பிறந்தது
ஆர்வம் மிகுந்தது
உயர்வு அளித்தது
ஊக்கம் கொடுத்தது ........!!!

பண்பு மிகுந்தது
பாசம் மிகுந்தது
உள்ளம் மகிழ்ந்தது
உறுதி அளித்தது ......!!!

தோளை அணைத்தது
தோழமை தந்தது
சாதி மறைந்தது
சாதிக்க தூண்டியது .....!!!

இருளை போக்கியது
இன்பத்தை தந்தது
அன்பை காட்டியது
அமைதியை தந்தது ........!!!





உமாபாரதி

எழுதியவர் : umamaheshwari kannan (25-Mar-14, 9:00 pm)
Tanglish : natpu pirandhadhu
பார்வை : 442

மேலே