தங்ககொலுசு தாரேன்
அக்கா பெத்த
அழகு பாப்பா
அம்மான் கண்டு
அழுகை ஏனோ ?
புருவம் தூக்கி
உதடு பிதுங்கி
மிரள முழிக்கையில்
வருகிறது சிரிப்பு !
சிங்காரக் கண்ணே
செந்தூரப் பூவே
பட்டாம் பூச்சியே
பப்பாளிப் பழமே !
தோள்மீது சுமப்பேன்
தாலாட்டுப் படிப்பேன்
விரல்பிடித்து நடப்பேன்
பொம்மைவாங்கித் தருவேன் !
பட்டு ரோசாவே
பயம் கொள்ளாதே
தாய்மாமன் நான்
தங்ககொலுசு தாரேன் !

