அக்னிச்சட்டி ஏந்தி வரோம்

அம்மா உன் அருள்வேண்டி
அக்னிச்சட்டி எடுத்து வரோம்
அன்புடனே ஏற்றுக் கொள்வாய் !

ஆலய மாட வீதிகளில்
ஆனந்தமாய் ஆடி வரோம்
ஆதிசக்தி துணை வருவாய் !

ஆகோ ஐயாகோ முழக்கம்
ஆகாயம் அதிரச் செய்யும்
ஆத்தாமனம் குளிரச் செய்யும் !

மஞ்சள்பூசி திலக மிட்டு
மஞ்சளாடை தின மணிந்து
மூன்றுவார விரத மிருந்து

பங்குனியில் பொங்கல் வைத்து
பட்டுடுத்தி பூவும் வைத்து
முத்துமாரி உன்னை வேண்டி

உடுக்கை யொலி உளமசைக்க
மேளச்சத்தம் மேனி சிலிர்க்க
பக்தியுடன் நாடி வரோம் !

வேண்டும் வரம் தந்திடுவாய்
வேடிக்கைகள் காட்டிடுவாய்
வேதனைகள் தீர்த்திடுவாய் ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (26-Mar-14, 12:25 pm)
பார்வை : 138

மேலே