மயக்குகிறாள் ஒரு மாது
நீயென்ன சந்தன சோலையோ
மண்ணுக்கு வந்த மஞ்சள் நிலவோ
விண்ணுலகும் காணாத நங்கையோ
என் மஞ்சத்திலே மங்கை மயங்க
நெஞ்சத்தையவள் மெல்ல வதைக்க
அவள் கூந்தல் சரியவிட்டு கொத்துபூ
அதில் தொங்கவிட்டு வண்டாக்கினால்
தேனென்ன பூவிலா தேவதையிதழிலா
இரண்டுமல்லாதொரு தெரியாயிடத்திலா
தன் கைமேல் கைவைத்து அதன்மேல்
பளிங்கி கன்னம்வைத்து கண்ணால் பேசி
காந்த பார்வையாள் கவர்ந்து பார்க்கின்ற
இடம்யாவும் பாவையவளின் வதனமே
அவள் பார்வையால் பரவசம்தந்து
நேர்த்தியாய் எனை களவாடுகின்ற
கீர்த்திதனையரிந்த பாசக்காரியவள்
யாவும் அறிந்தே உன்னில் நான் தெரிந்து
சிக்குண்ட விட்டில்பூச்சியாய்போனேன்
என்றும் காதலோடு கவிதையாய்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

