குறி 3
கருவேப்பிலையின் வாசம்
அரசியல் வாதியின் பாசம்!!....
சிறையும் கறையும்
சீக்கிரம் கரையும் (தூக்கு)
தண்டனை நிறைவேறினால்?!....
யார் மீது கோபப்பட்டதோ காகம்?!....
கத்தித் தணிக்கிறது!!....
ஆரத்தி தட்டோடு
பூரண கும்ப மரியாதை!! - களத்தில் நிற்கும்
பணக்கார குதிரைக்கு?!....
பிச்சைக்காரர்கள் சங்கம் சார்பில்
அரசியல் எழுச்சி மாநாடு
திருவோட்டை தங்கள் சின்னமாக
அறிவிக்க கோரிக்கை?!....