நாணயம்

நாணயமில்லாதோருடன்
நட்பு பாராட்டுவது
நரியிடும் ஊளையை
நானேயிடுவதற்கு சமம்
விஷமேயுண்டாலும்
முதல் துளி நானுண்ண
வேண்டும்
முடிந்து போன முகவரிக்கு
முகமூடிஎதற்கு ?

ஆகாதென்று தெரிந்தபின்பு
வேரோடு களைந்து விடு
பொய்யாய் பேசி போலி
புன்னகை வீசி
வேடிக்கை காட்டாதே!
நட்புக்கு இலக்கணம்
யாரென்று கேட்டால்
நம் பெயரை நாளைய
கல்வெட்டும் சொல்ல

நாணயமாய் வாழ
நட்பில் நாணயமும்
வேண்டும்
நான் என்று சொன்னால்
அது நீ என்றே சொன்னேன்
அது நாம் அல்ல நட்பே
நீ நீ நீ மட்டும் தான்!
விட்டுத் தந்தேன்
வெற்றியுடன் வாழு!
....................நட்புடன் சஹானா தாஸ் !

எழுதியவர் : சஹானா தாஸ் (27-Mar-14, 5:50 pm)
Tanglish : naanayam
பார்வை : 464

மேலே