எந்த அன்பு பெரிது
எந்த அன்.. பு பெரிது ?
--------------------
உதிரத்தை உணவாக்கி ஊட்டி வளர்த்த
தாயண்பு பெரிதா ?
உழைபால் உதிரம் சிந்தி உடல் மெலிந்து
உதட்டிலே புண்கையாய்
எனைவளர்த்த தந்தை பெரிதா ?
ஒருவாய் சோற்றினை இருவாய்க்கு பங்கு வைக்காமல்
எனக்கே கொடுத்து அகம் மகிழந்த
அக்காவின் அன்பு பெரிதா ?
அண்ணன் அவன் ஆண்பிள்ளை
அவனுக்கு கொடுங்கள்
என அடங்கிபோன தங்கையின் நேசம் பெரிதா ?
நான் திருடிய பொருளுக்கு
தான் அடிவாங்கி மானம் காத்த
நண்பனின் நட்பு பெரிதா ?
வீட்டை எதிர்தா கல்யாணம்
விட்டுவிடுவோம் உன் தாய் தாங்கமாட்டாள்
என பிரிந்து இன்னும்
கன்னியாக வாழும்
காதலியின் உள்ளம் பெரிதா ?
எப்போது வருவேன் என
எதிர் நோக்கி காத்திருக்கும்
மனையின் மனம் பெரிதா ?
அப்பா என்றால் அகிலமே
நிகரில்லலை என்று
அன்பு வைத்த அருமை மகள் பெரிதா ?
எது பெரிது?
ஆனாலும்
எல்லாமே பெரிதுதான்
என்று என்னுகின்ற
மனதினை
எனக்களித்ததுதான் மிக பெரிது
என என்னுகின்றேன் சரியா ?