அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்- சிறு குறிப்பு04

அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்- சிறு குறிப்பு:...(04)
வாய்பாடு: 07----------------காய் காய் காய் காய்
------------------------------------------------------------ மா மா
எ-டு:
மின்/னிருக்/கும்/ எண்/ணுகை/யில்/ மிகுந்/திருக்/கும்/ தனி/மையி/னில்/
மெல்/ல/ வந்/து/
முன்னிருக்க விட்டாலோ மூவுலகும் மறைத்துவிடும்!
முளைத்து விட்டால்,
பின்னிருக்கும் விளைவெண்ணிப் பேசுகின்ற அறிவினையும்
பிழைசெய் விக்கும்!
தன்னிருப்பில் களைபோலத் தான்,தோன்றித் துளிர்க்கின்ற
தன்மைக் காமம்! --------------------[எசேக்கியல்காளியப்பன்]

வாய்பாடு: 08 --------------விளம் மா காய்
-------------------------------------------மா மா காய்

எ-டு:
உச்/சியை/ வரு/டும்/ கதி/ரொளி/யும்/
==உல/ரா/ வே/ரின்/ மழைப்/பொழி/வும்/
பச்சய மென்னும் நம்பிக்கை,
==பரவக் கிடைக்கா நாட்களிவை;
இச்சையும் பதவி ஆசைகளும்,
==இயல்பாய் வீசும் விசக்காற்றாய்!
மிச்சமும் இன்றி இவ்வளமே
==மீளா தழியும் நாளிதுவோ? ----------------------[எசேக்கியல்காளியப்பன்]

வாய்பாடு: 09 ----------- காய் மா விளம்
---------------------------------------காய் மா விளம்
எ-டு
சிந்தித்தால் எழுது சிறுகதை;
====சிரித்தாலோ எழுது நகைச்சுவை
நிந்/திப்/பின்/ முன்/னால்/ நீ/எழு/!
====நெடும்/புய/லைப்/ போ/ல/ உடன்/,அகல்/!
வந்/திக்/கும்/ கை/யை/ வரு/டிடு/!
==== வஞ்/சத்/தைச்/ சுனா/மி/ யாய்/வளை/!
முந்/திக்/கொள்/ தமி/ழின்/ முன்/பணி/!
====முடிந்/தா/லே/ செய்/க/ கவிப்/பணி!/
---------------------- [எசேக்கியல்காளியப்பன்]
========= இன்னும் வரும் ====

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (28-Mar-14, 12:30 pm)
பார்வை : 125

மேலே