சமநிலையே எந்நாளும் நிலைத்திடுக

மஞ்சள் பூவாடை விரித்திருக்க
மயில்கள் நூலாடை தரித்திருக்க
பகலவனும் படுத்து ஓய்வெடுக்க
பகலையும் பனித்திரை போர்த்திருக்க
சுமைகளை சுகமுடனே தாங்கியிருக்க
இமைகளும் இனபத்தில் பூத்திருக்க
இதயங்கள் மகிழ்ச்சியில் மிதந்திருக்க
ஆனந்தமாய் நடைபோடும் நங்கைகள்
ஆடிக்காற்றில் அசைந்திடும் அன்னங்கள் !

உழைப்பதில் உவகை இவர்களுக்கோ
உரைப்பதில் பெருமை உள்ளங்களுக்கு !
பெண்மையை காத்திடும் பெண்ணினம்
பெரும்புகழே பெற்றிடும் மண்ணிலே !
நாகரீகம் வளர்ந்தாலும் நானிலத்தில்
நாணலாய் வளைந்தாலும் நிமிர்ந்திடும்
நாணமுள்ள நெஞ்சங்கள் எக்காலமும் !
சமநிலையே எந்நாளும் நிலைத்திடுக
சமுதாயத்தில் பெண்ணியம் வாழ்ந்திடுக !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Mar-14, 8:14 am)
பார்வை : 152

மேலே