தமிழனின் புலம்பல்

இது கவிதை இல்லைங்க...!
எதுகை மோனை பாக்காதீங்க ..!
சந்த நடை பாக்காதீங்க...!
இது உணர்ச்சிங்க...
கஞ்சி குடிக்கும்
பாமரனின் தமிழ் உணர்ச்சிங்க..!

-----------------------------------------------------------

இந்திய அரசே...!
தமிழ் சனங்கள
கொல்ல அன்னிக்கு
விமான தாங்கி
கப்பலு அனுப்புனீக
குண்டுபோட
விமானம் அனுப்புனீக
கூடவே இந்திய
இராணுவத்தையும்அனுப்புனீக

எங்க மொத்த
தொப்புள் கொடி
உறவுகளையும்
வேறோடு அறுத்து
நாசப்படுத்தீனிங்க..!

அப்போ
அடுத்த நாடு .
இறையாண்மை சங்கதி .
ஆதரவா அனுப்பகூடாது .
எட்டிப்பாக்க கூடாதுன்னு
தலையீடு கூடாதுன்னு
அறிவு அப்போ இல்லையா
இந்திய அரசாங்க நாய்களே...! ?

இப்போ..!
ஜெனிவா மாநாட்டுல..!
இரத்த சம்பந்தமில்லா
இங்கிலாந்து கேக்குது.
அக்கறை தேவையில்லா
அமெரிக்கா கேக்குது .
சம்மந்தப்படாத
சர்வதேசமும் கேக்குது.

ஈழத்துல நடந்தது
இனப்படுகொல.
காட்டேரி நாயை
இழத்து வச்சு
அறுக்கனும்ன்னு
ஒலகமே ஆத்திரப்படுது..!


இந்திய தாயே..!
லங்காவுல இருப்பது தமிழர்கள்
தமிழன் உம்ம பிள்ளைகள்
தமிழ்நாடு உனக்கு சொத்து
நீயே வாயை பொத்திக்கிட்டு
இருக்கீயே...!
நீயா எங்க தாயீ ?
நீ எங்கள உன் பிள்ளைகளா
நினைச்சிருந்தா
இப்படிலாம் நடந்துக்க மாட்ட
நீ நினைக்கல..!
அதான் நீ கேக்கல?


நீ எப்படி கேப்ப தாயீ ?

கொல்ல சொன்னது சோனியா..!
கொல்ல உதவியது இந்தியா..!
கொடூரமா கொன்னது ராஜபக்‌ஷே..!
இது கூட்டணி திட்டம்தானே தாயீ..!?

இந்திய அரசே...!
நீ எங்க சனத்தை கொன்ன பாவி...!
நீ எங்க சொந்தத்தை கொன்ன கொலைக்காரி..!
நீ எப்படி கேப்ப ?


அடுத்த நாட்டு இறையாண்மை
தலையீடு கூடாதுன்னு
அப்போ உனக்கு தெரியலையா?

இப்போ எப்படி தெரியுது
தாயீ .. இந்திய தாயீ...!
இறையாண்மை
மயிராண்மை எல்லாம்....!



-----------------------------------------------
ஈழத்து மண்ணில்
சிந்திய செங்குருதி
துளிகள் ஓவ்வொன்றுக்கும்
தெரியும் ...........!
இனப்படுகொலை செய்தது
இலங்கை அரசல்ல
இந்திய அரசுதான் என்று..!

அடுத்த நாட்டு
இறையாண்மையை
வாய் கிழிய பேசும் அரசே!
கிழிந்து புதையத்தான் போகிறது
விரைவில் உன் நாட்டாமை..!


----------------------------------------------------------------------------
இந்திய நாட்டுப்பற்றுடைய தோழர்களே....! இந்திய அரசு தமிழ் இனத்திற்கு செய்த துரோகத்தை ஒரு முறைக்கு இருமுறை இணையதளங்களில் படித்து பாருங்கள்..!

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (29-Mar-14, 7:07 pm)
Tanglish : tamilanin pulambal
பார்வை : 367

மேலே