காலையில் காண்கையில் கனத்தது மனது

ஆள்பிடிக்கும் வாகனம்
வாசலில் வந்துநிற்க
அவசரமாய் கிளம்பி
அம்மா வேலைக்கு விரைய
கண்ணீரில் குளிக்கின்றான்
சனிக்கிழமை விடுமுறையிலும்
அம்மாவின் பிரிவினால்
கனத்த இதயத்தோடு
விடை பெறுகிறாள்
விழியோரம் கண்ணீர்மல்க
அந்நேரத்தில் ஆதரவாய்
அழைத்துச் செல்கின்றாள்
தவித்திடும் தம்பியை
தாயன்போடு அக்கா..

#காலையில் காண்கையில்
கனத்தது மனது#

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 11:09 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 115

மேலே