வறுமை என்னச் செய்யும்
விட்டு விட்டு இடிக்குது வானம்
கொட்டக் கொட்ட பொழியுது மழை
பளிச்சென மின்னல் மின்ன...
பருவத்தே பூத்த காளான் நீ !
பாலைவன கப்பலேறி
உச்சி சூரியனை தொட்டவன் நானே !
வந்திருக்கும் வயிற்றுப் பசியும்
என்செய்யும் என்னையென்று பார்ப்பேன் !!
பசித்தவனுக்கு வயிற்று வலி !
அதிகம் புசித்தவனுக்கும் ஆங்குண்டு
முயற்சியெனும் போராட்டத்தை
தோற்றுவிட நீ முளைத்தாய் !!
உடலைத்தான் முடமாக்குவாய்!
உள்ளத்தில் தெம்பிருக்கு
உணர்வில் வலிசெலுத்தி
உன்னால் வெற்றிபெற முடியாது!!
ஒருநாள் வலிபொருத்து
ஒவ்வுருனாலும் பழகிப்போச்சு !
ஒத்துமையாய் மனமிருக்க
ஒன்னும் செய்ய இயலாதுன்னால்...!
கரைக் கடக்கும் புயலைப்போல்
வறுமையும் ஒருநாள் கடக்கும் !
எத்துனை பெருஞ்செல்வம் எனை சூழ்ந்தாலும்
உன் நினைப்பு தினம் நெருப்பாய் தகதகக்கும்...!