பேரின்பம்

பல கட்டங்கள்
தாண்டினேன் எளிதாய்
உன் விழி சட்டத்தில்
விழுந்தேன் முழுதாய்
மீளவும் போட்டேன்
வளியிலும் கணக்கு
அனைத்தும் போயும்
விட்டது பிணக்கு
பெற்றேன் ஓர் தெளிவு
நீயின்றி வாழ்வது அரிது
உன்னில் கரைவதில் ஆனந்தம்
உன்னால் வாழ்வும் ஆகும் பேரின்பம்

எழுதியவர் : av (29-Mar-14, 5:38 pm)
சேர்த்தது : gokul kannan
Tanglish : perinbam
பார்வை : 59

மேலே