பசு மாடு விட்ட கண்ணீர்
ஊரு விட்டு போறவரே
ஒரு நிமிஷம் நில்லுங்க!!
காடுகரை செத்ததுன்னு
ஊரைவிட்டு போறிங்களே..!
நீங்க பெத்த பிள்ளைகளை
வெளிநாட்டுக்கு அனுப்பிட்டிங்க !
உங்களை கரைசேர்க்க பட்டதுன்பதிற்கு
கறிக்கடையில் வித்துட்டிங்க !
உங்க பிள்ளை வளரத்தானே
எம்பிள்ளை கட்டிபோட்டு பாலையும் கறந்திங்க!
பசுமையை போசிக்குபுட்டு
பறந்தும் தான் போவிங்க...!
யாருபெத்த பிள்ளை நாங்க
மறந்தும் தான் போனதிப்போ...!
கால்நடையாய் பிறந்ததுக்கு
கண்ணீர் மட்டும் மிச்சமுங்க !
கூரு போட்டு என்னுடலை
ஊருக்கெல்லாம் தானம் தந்து
ஊரைவிட்டு போவதற்கு
விருந்துன்னு வைப்பிங்க...!
ஆறறிவு மனிதா எனக்கு
ஆதரவாய் யாருமில்லை போடா !!
நாளை உனக்கும் அந்த நிலை
வந்திடாதா பொறுத்திருந்து பாருடா !!