சுனாமி கடல் கொந்தளிப்பு

அமைதி பொங்கும் உன்னுள்ளம்
அனைத்துள்ளங்களின் பிறப்பிடம்
அனைவரையும் சூழ்ந்துள்ள - நீ
போர் கொடுத்தால் தாங்குமா?

கண்ணுக்கெட்டிய தூரம்வரை - நீ
கம்பளம் போல் படர்ந்துள்ளாய்
கப்பல்களை சுமக்கும் கரங்களில்
கத்தியை தூக்கலாமா?

பற்பல உயிர்களை வாழவைக்கும் நீ- உன்
பசிக்காக பலலட்ச உயிர்களை உண்ணலாமா
பாதுகாக்க வேண்டிய நீ -எங்களை
பார்துறக்க செய்யலாமா?

குழந்தைகள் போல் - உன் மடியில்
குதித்து விளையடிய அனைவரையும்
கூண்டோடு அழித்தாய் - உன் மனதில்
குதுகாலிக்கிறதோ சந்தோஷம்?

பெற்றோர் இழந்தும் - உற்றோர்
இழந்தும் , வீடு நாடு துறந்தும்
வாழ செய்த நீ - கூண்டோடு
அழித்திருக்கலாமே எங்களை...

எழுதியவர் : மணிசந்திரன் (30-Mar-14, 7:33 pm)
பார்வை : 105

மேலே