காதல் ஒரு - டாஸ்மாக்
சும்மா நச்சுன்னு இருந்தாடா
சும்மா குப்புன்னு நுழைஞ்சாடா
மனச தூக்கிட்டு திரிஞ்சாடா
அவள் அழகினில் அரைஞ்சாடா
மிதக்குதடா... உலகம் இப்போ பறக்குதடா..
பட்டாபட்டி போட்டுக்கிட்டு
வம்புல வாங்கி தெரிஞ்சேன்.
இத்துனூண்டு பார்த்த அதில்
என் தூக்கத்தையே தொலைச்சேன்.
மப்புல நான் மட்டையாகி
ரோட்டுல மண்ணா கிடந்தேன்
அவள எப்போ பார்த்தேனோ - உடன்
சொர்க்கத்தில் மிதந்தேன்.
தண்ணி ஊத்திக்கிட்டு பாட்டில்
உடைக்கும் நெஞ்சம்.
காதல் வந்ததாலே மனம்
பாட்டிலையே கொஞ்சம்.
காதல் ஒரு - டாஸ்மாக் ....
மனச வித்து - சரக்கேத்து!
அக்கறையே இல்லாமலே - பல
நித்திரைகள் தொலைச்சேன்.
ஏக்கரைக்கும் சேராம நான்
தனிமையில் தவிச்சேன்.
இப்போ என்னவோ - நான் புதுசா
தனிமையை ரசிச்சேன்.
கீழ்பாக்கம் எட்டாம நான் - எப்பவுமே சிரிச்சேன்.
காதல் ஒரு போதையினு
இப்போ நல்ல தெளிஞ்சேன்.
டாவ பார்த்துபுட்டா - .......
வெட்கத்திலே நெளிந்சேன்.
காதல் ஒரு - டாஸ்மாக் ....
மனச வித்து - சரக்கேத்து!