தொலைந்த உறவு

நீ கட்டி அணைத்த
கத கதப்பு ...

உன் நெடிய நெருக்கம் ...

நீண்ட தேடல் ...

குறும் புன்னகை ...

கொஞ்சும் மொழி ...

பஞ்சு மிட்டாய் கனவு ...

கிள்ளி ஊட்டிய
கிழிந்த தோசை ..

பென்சில் பிடித்து போட்ட
பெரிய ஆ னா

மார்பு மீது போட்ட
மத்தியான கோலம் ..

என் வேட்டிகட்டி
நீ போட்ட பாரதியார் வேஷம் ..

அப்பாதான் பெத்தாங்க நீயில்ல..
அம்மாவையே அதிசயிக்க வச்ச உன் பேச்சு ..

செல்ல மகளே...
என்றும் நினைத்து
எனக்கே தெரியாமல் அழுகிறேன் ..

அரேபிய பாலையில் ..
தொலைந்த ஒட்டகமாய் ...!!!!

எழுதியவர் : அபிரேகா (31-Mar-14, 2:18 pm)
Tanglish : tholaintha uravu
பார்வை : 219

மேலே