மனமெனும் பட்டமரம்

அன்று காய் கணிகள் இலைகளோடு பறவைகளும் என்னுள் கூடுகட்டி கும்மாலமாக குதுகளிக்க தனிமரமாய் இருந்த நான் குடும்பம் பந்தம் பாசம் என அனைத்தும் அறிந்து மகிழ்ந்தேன் .தனி மரமாய் வளர்ந்த சோகம் மறைந்து சொர்க்கமே கண்டதான மகிழ்ச்சி என்னுள் .காலமாறியது சுட்டெரிக்கும் சூரியானால் தவறேதும் செய்யாமலே தண்டனை பெற்றேன் .இலை மறைந்து காய் மறைந்து இவற்றோடு பறவைகளின் பந்தம் இழந்து பட்டமரமாய் வாழ்கிறேன் வருந்துகிறேன்! என்னுள் ஆயிரம் கேள்விகள் .அவற்றில் ஆறு-தனி மரமாய் வளர்ந்த நான் அப்படியே இருந்திருக்க கூடாதா-காய் கனி தந்து பறவைகளின் பந்தம் வந்தது ஏன் சென்றது ஏன்-சூரியனின் தவறுக்கு தனக்கு ஏன்-அன்றைய மகிழ்ச்சி இன்றைய துண்பம் இரண்டும் குற்றமா-தொடர்கிறது காய்ந்த மரத்தின் கண்ணீர் கதைகள் .விரகாய் எரிந்து கரியாய் மறையும் வரை தொடரும் இந்த சாபம் மறைவதும் குறைவதும் இல்லை உலகிலே என உணர்ந்த போதும் ஏற்க மறுக்கிறது மனமெனும் பட்டமரம் .

எழுதியவர் : moorthi (1-Apr-14, 8:27 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 161

சிறந்த கவிதைகள்

மேலே