இவர்தான் ஆசான்
'' இவர்தான் ஆசான் ''
'' கல்வியென்னும் பெருங்கடலில் மூல்கி,
அச்சமுத்த்ரத்தில் முத்தெடுப்பவன் - ஆசான் //
'' பாடத்தில் படங்களே இல்லை என்றாலும் ,
படமாய் மனக்கண்முன் நடத்திச்செல்பவன் - ஆசான் //
'' தன்னை தீக்குச்சி ஒளியாக்கி மற்றவரை,
பேரொளி ஆக்கச்செஇபவன் - ஆசான் //
'' கற்றது கையளவு கல்லாதது உலகளவு என தன் ,
அனுபவத்தை உரைநடையில் உரைப்பவன் - ஆசான் //
'' தன்னை ஏணியாக்கி உன்னை ஞானியாக்க தனக்கு ,
பிணியே ஆனாலும் தன் பனிச்செய்பவன் - ஆசான் //
'' நீ சிரமத்தில் இருந்தாலும் உன்னை சீரும் சிறப்புமாய் ,
சிகரத்திற்கு வழிக்காட்டுபவன் - ஆசான் //
'' மாதா ,பிதா ,குரு ,தெய்வம் , என மூன்றாம் இடத்தில் ,
இவன் இருந்தாலும் மற்ற மூவரின் மத்துவத்தை ,
உணர்த்துபவன் - ஆசான் //
'' எழுத்தறிவு + வித்தகன் = ஆசான் ,,// அன்புடன் சிவகவி ,,