புரிந்துக்கொள்ளடி
புரிதலின் இடைவெளியில்
காதலை மறுப்பேன் என்றாயே...!
புரிதலுக்கு தானே கண்ணே
புரிகிறோம் இந்த காதலை..!
நீயா சொன்னது ?
மெய்யா சொன்னது - மனம்
தீயா சிரிக்குது- இதயம்
பனியா உறைகிறது
தாரமா வருவேன்னு
தாராளமா ஆசையில் இருந்தேனடி..!
காரமா நீ பேசினா
கலவரமா மனம் கலங்குமடி..!
உன் பேச்சென்ன கடல் அலையா?
என் மனமென்ன மண்சிற்பமா?
உருக்கி செதுக்கி வைத்தேன் உனையே..!
பொங்கி விரைந்து வந்து கரைத்தாயே..!
புலப்பட்டும் புலப்படாமல் மறைந்தும்
புலப்பட்ட காட்சியும் நீட்சி அடையாமல்
கண்ணாமூச்சி ஆடும் நம் காதல் என்ன ?
கானல் நீரோ.?.. வானவில்லோ?
உன்னை மன்னித்து
என்னை ஏற்றுக்கொள்வாயா?
என்னை மன்னித்து
உன்னை எனக்கு தருவாயா?
ம்ஹூம் என்று சொல்
இடுக்காட்டில் பிணமாய் எரிகிறேன்.
இம் என்று சொல்
சுடும் காதல் புன்சிரிப்போடு வருகிறேன்.
----------------------------------------------------------------------------
---இரா.சந்தோஷ் குமார்.