இவர்களின் உலகம்

(பார்வையற்றவர்களுக்காக ஒரு படைப்பு )


நண்பர்களை
கலைகளை
உள்ளுணர்வு வைத்து
செதுக்கும் சிற்ப்பிகள் ....

மன கடிகாரத்தில்
இயங்குவதால்
நேரம் பார்க்காது
நேரத்தை பயன்படுத்துபவர்கள் ...

ஒழுங்குமுறை
இவர்களிடம்
நாம் காசு கொடுத்து
கற்று கொள்ள வேண்டிய பாடம்..

காது கேட்கும் சக்தி
உணர்வுகளின் சக்திகளால்
"ஒ " போட வைக்கும்
அபாரமான சாதனையாளர்கள் .

இல்லாததை நினைத்து மனம்
இறுகாமல்
இருப்பதை முழுமையாய்
இயக்குபவர்கள் ...

அடி அடியாய்
அடி எடுத்து வைத்தாலும்
அபரீதமான
ஆன்ம சக்தி உள்ளவர்கள் ...

தன்னம்பிக்கையால்
கனவுகளை நனவாக்கி
நனவை கனவுலகில் வாழும்
தன்னம்பிக்கை நாயகர்கள் ....

தலை வணங்குவோம்
இவர்களின் வலிமைக்கு
மன உறுதிக்கு
சாதனைகளுக்கு .......

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (6-Apr-14, 6:21 pm)
Tanglish : ivarkalin ulakam
பார்வை : 79

மேலே