எங்கும் பொய் எதிலும் பொய்

​பொய்யுரைகள் சங்கமிக்கும்
குப்பைத் தொட்டி
மனித உள்ளம்!

காதலியை வசப்படுத்த
பொருத்தமில்லா
வர்ணனைகள்!
காதலன்!!

தந்தையிடம் பணம் கரக்க
தந்திரமாய்
பொய்யுரைகள்!!
பிள்ளை!!

வேலை கொள்வோன் தனதாக்க
உடல் கூணி
பொய்யுரைப்பான்!!
தொழிலாளி!!

கொண்டவனை இனங்க வைக்க
கண்களிலே
முதலைக் கண்ணீர்!
மனைவி!!

வேலை செய்ய மறுத்துரைக்க
மேனியிலே
பொய்ப் பிணிகள்!
வேலைக்காரன்!!

இயலாமை மறைத்து வைக்க
மற்றவர் நம்ப
பொய்ச் சாட்டு!
நண்பன்!!

கொள்ளையாய் இலாபம் பெற
ஒன்றிணைந்து ஒற்றுமையாய்
பொய்யுரைப்பு!
வியாபாரி!!

இலாபமாய்ப் பொருள் வாங்க
பொய்யாய்
அகத்தில் இன்முகம்!
நுகர்வோன்!!

எழுதியவர் : ஜவ்ஹர் (8-Apr-14, 2:28 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 720

மேலே