என்செய்வேன் பெண்ணே என்செய்வேன்
என்னை விதைத்துவிட்டு
எங்கு நீ புதைந்தாய்
என்னை மரமாக்கிவிட்டு
எங்கு நீ விறகானாய்
என்னை கவிஞனாக்கிவிட்டு
எங்கு நீ ஓவியமானாய்
நிலாவில் தேடிப்பார்த்தேன்
நீ தென் படவில்லை
உலாவும் தென்றலை தூதனுப்பினேன்
ஒரு விடிவும் புலப்படவில்லை .
கற்பூரமாய் காற்றில் கரைந்தேன்
உன்னைக் கானா வெப்பத்தில் எரிந்தேன்
.
அலையோடு அலையாய் ஓடினேன்
அங்கும் உனையேத் தேடினேன்
பூக்கள் சிரித்தது பாக்கள் செய்தேன்
தீக்குள் விரல்விட்டு ஏக்கம் பாடினேன்
ரோட்டோரத்து மைல் கல்லில்
நினைவை சுவரொட்டியாக்கி
வீட்டோரத்தில் ஒருமுனையில்
பதிலுக்காய் காத்திருந்தேன்.
பால் நிலவு தேய்ந்து
பால் நிலவும் வந்தது
உன்முகம் மட்டும்
பகல்கனவாய் தொலைந்தது
புத்தாண்டு தொடங்கி
புத்தாண்டும் வந்தது
பறவைக் கூட்டங்களும்
பாதி இடம்பெயர்ந்தது .
பாவிப் பெண்ணே
உன்னை மட்டும் காணவில்லை.
வார நாளுமில்லை வாழ் நாளுமில்லை
வனிதையுனை பார்க்காமல்
வாய்க் குணவுமில்லை
கடைசியில்-
கல்யாண நாளன்று
காதலிக்கிறேனென்று வந்து நிற்கிறாய் .
என்செய்வேன் பெண்ணே
என்செய்வேன்.

