மனைவி தேவை

மனைவி தேவை
************************
நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்வதற்குப் பெண் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இளைஞன் பிரபல நாளிதழில் "மணமகள் தேவை!" என விளம்பரம் செய்தான்.

ஒரு பதில் கூட வரவில்லை. தளர்ச்சி அடைந்து மீண்டும் வேறு விதமாக "பெண் தேவை!" என விளம்பரம் செய்தான். இதற்காவது பதில் வரும் . பெண் வத்தலாய் இருந்தாலும் தொத்தலாய் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென முடிவெடுத்தான். அதற்கும் பதில் வரவில்லை.
மனம் நொந்து திருமண எண்ணத்தையே கைவிட முடிவெடுத்த வேளையில் அவனின் நண்பன் நடந்தவைகளைக் கேட்டறிந்து ஆறுதல் சொன்னான்.

"நண்பா! இது வரை நீ கொடுத்த விளம்பரங்கள் மக்களை சரியாக சென்றடையவில்லை எனத் தெரிகிறது. எனவே தெளிவான விளம்பரம் கொடு! நிச்சயம் பலன் தரும்."
தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் நண்பனுக்காக விளம்பரம் தர முடிவெடுத்து விளம்பரம் தந்தான்.
"மனைவி தேவை! எந்த செலவும் இல்லாமல் என் சொந்த செலவிலேயே திருமணம் செய்து கொள்வேன்!!"
மறுநாள். ஆயிரக் கணக்கில் கடிதங்கள் குவிந்தன. நம்ப முடியாமல் நண்பனுடன் சேர்ந்து கடிதங்கள உடைத்துப் படித்தான்.

அனைத்து கடிதங்களும் ஒரே பொருளில் எழுதப்பட்டிருந்தன.
"மனைவி தேவை விளம்பரம் கண்டேன். தங்கள் சொந்த செலவிலேயே திருமணம் செய்து கொள்வது மகிழ்ச்சி. எனது மனைவியைத் தர சம்மதம். எடுத்துக் கொள்ளவும்

நன்றி ;அமர்க்களம் தளம்

எழுதியவர் : அமர்க்களம் தளம் (10-Apr-14, 7:04 pm)
Tanglish : manaivi thevai
பார்வை : 274

சிறந்த நகைச்சுவைகள்

மேலே