பட்டாம்பூச்சி போல

பக்தர்களுக்கு மட்டுமின்றி
காக்கைகளுக்கும் ஒலிக்கும்
கோயில் மணி

எல்லாம் இருந்தும்
பறக்க முடியவில்லை
பட்டாம்பூச்சிபோல

நிலவைப் பாதி
மறைத்து நிற்கிறது
எதிர்வீட்டு நிலா

உடையாமல்
பசியாற்றியிருக்கிறது
யானை உண்ட விளாம்பழம்

மறைவில்
முகம்மறைத்து அழுகின்றது
குயில்

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (11-Apr-14, 7:24 am)
Tanglish : pattaampoochi pola
பார்வை : 156

மேலே