வலி தாங்காமல

வலி தாங்காமல்
கதறி அழுகிறது
காதல் கவிதைகள்.
*
எங்கெங்கோ தேடிக் கண்டுபிடித்தான்
பெட்டிக்குள்ளிருந்தது
காணாமல் போன விமானம்..
*
யாரேனும் கொஞ்சம்
சிரித்துக் காட்ட முடியுமா?
அகம்பாவச் சிரிப்பு.
*
கோடைத் தாகமோ?
தண்ணீர் இல்லாதத்
தொட்டியின் மீது காகம்.
*
கிருஷ்ணர் வேஷம் போட்டு
அழகு பார்த்தார்கள்
மொட்டை அடிக்கும் முன்…!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (11-Apr-14, 10:55 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 111

சிறந்த கவிதைகள்

மேலே