வேடிக்கை காட்டிடும்

வெளியே
உள்ளதை எறிந்து உள்ளே
உள்ளதை
சமைத்தான்
கல்லறையில்...............!
முழு உலகமும்
சுற்றி வரும் நீ இருக்கும்
இடத்தை தேடி பணம்
இருந்தால்.................!
அறிவை மங்கச்
செய்யும் மதி மயங்கிடச்
செய்யும் பலகீனம்................!
உழைப்பை
நம்பி வாழ என்றுமே
காத்திருந்தேன்
வைராக்கியத்தோடு
தெரு ஓரத்தில்
பிச்சைக்காரன்.............!
ரசிக்கும்
சிலநேரம் மயக்கம்
பலநேரம்.........!
வேடிக்கை
காட்டும் நாடக மேடை
நடனம்
ஆடுகின்றது
வாழ்க்கை..........!