நீ இன்றி

நீ இன்றி........
உயிர் வாழ மறுக்கிறேன் நீ இன்றி
உடல் கூட கொதிக்குது உன் நிழல் இன்றி!
துடிப்பதற்கும் இதயம் இன்றி
கண்ணோடு தூக்கம் இன்றி
காய்கிறேன் நானும் என் காதல் நீ இன்றி
விழிகளில் பார்வை இன்றி
வீதியில் பாதை இன்றி
செல்கிறேன் நானும் வழிஇன்றி
சுவாசிக்க நீர் இன்றி
தாகத்திற்கு காற்றின்றி
சொற்களில் முறையின்றி
பிதற்றுகிறேன் சுயநினைவின்றி!!
தாலாட்ட ஆள் இன்றி
தட்டிக்கொடுக்க கைகள் இன்றி
உறங்குகிறேன் நானும் தூக்கமின்றி!!
மனதில் ஒரு மகிழ்வின்றி
முகத்தில் ஒரு களையின்றி
கலங்குகிறது கண்களும்
அழுவதற்கு கண்ணீர் இன்றி
ஆதரவிற்கு யாரும் இன்றி
அன்பு காட்ட நீயும் இன்றி
வாழ்கிறேன் நானும்
வாழ்வதற்கு விருப்பமின்றி!!.................