காதல் பயணம்

என்காதல்:
அதிகாலை இரவில்
குளிர் சுடும் தென்றலில்
குடைக்குள் மழை போல
உன் மார்பில் முகம் புதைத்தேன்!!!!
இளந்தென்றல் மலர் தீண்ட
இரு கைகள் உனைத்தீண்ட
இரவும் கூட வெட்கத்தில் நெளிந்தது!
கொட்டும் பனியோடு காதல் பேசியது!!
குலுங்கிய பேருந்தில்
குளிர் சிந்திய இரவில்
குடை போல மடங்கினேன்
குழந்தையாய் உறங்கினேன்!!
குறுகிய உன் இடையோடு!!
கூச்சம் கொண்ட கண்ணோடு!!
எனைத்தீண்டும் பனியை
உன் அணைப்பி்ல் தடுக்கிறாய்
என் சுவாசக்காற்றில்
உன் வாசம் சேர்க்கிறாய்!!
வளைந்த உன் புருவங்கள்
வானவி்ல்லைக் காட்டுதடி!
சிவந்த உன் உதடுகள்
என் தாகத்தைக் கூட்டுதடி!!
பூக்களும் உன் கூந்தல் சேர ஏங்குதடி!
எச்சரிக்கிறேன் பூக்களை!
உன் கூந்தல் வாசம்
என் சுவாசமாக இருக்கும் என்று!!
என் கவிதையும் உன்னை காதலிக்கும்!
என் கவிதை நீ என்னை காதலிப்பதால்!!
என்னுயிர் நீ என்னை பிரியாமல் இருந்தால்
என்னுயிர் என்னை பிரியாமல் இருக்கும்!!
உயிர் கொண்ட காதல் எப்போதோ பிரியும்!
உயிருக்கு உயிரான காதல் எப்போதும் பிரியாது!!
உனக்காக காத்திருப்பேன்
நீ வரும் வரை அல்ல!
நான் வாழும் வரை!!