மத்தாப்பு மனசு

அப்போ எனக்கு வயது 17..
விடலைப் பருவம்..!!

அரை தூக்கத்தில் இருந்தவனை
அடித்து எழுப்பி விட்டது
அடுத்த வீட்டு நண்பனின்..சரவெடி..!

இருதயம் இன்பத்தில் சப்தம் இட..
தலைதெறிக்க ஓடினேன் ..வாசல் நோக்கி..!

என்னவென்று சொல்ல இந்த நாளை?
தெரு எங்கும் திருவிழா..!!
வான வேடிக்கை..!! வண்ணமயம்!!

அந்த அதிகாலை அரை இருட்டில்
என் கண் அவசரமாக
எதிர் வீட்டை தேடியது..! சொல்லிவிடவா?

கார்த்திகா!! அவ பேர போலவே
வெளிச்சமா இருப்பா.!
எனக்கு அவகிட்டே புடிச்சதே அதுதானே..!

அவங்க அப்பா தாசில்தார்..!
ஊருமாத்தி இங்க வந்து ஆச்சு வருஷம் ஒன்னு ..!

ஆனா என் மனசுல கார்த்தி
நெனைப்பு வந்து ஆச்சு நாளு பல..!
ரெண்டு பேரும் ஒரே பள்ளிக்கூடத்துல தான் படிக்கறோம்
ரெண்டு வீடு தள்ளி அவ வீடு..!

தாசில்தார் புள்ள ஆச்சே..
படிக்கறத்துல எப்பவுமே மொத தான்.!
நா எப்பவுமே கடைசி பெஞ்சு.!!
வாத்தி கிட்ட வாங்காத அடி இல்ல
அவ சிரிக்காத நாளும் இல்ல.!!!

கதவோரம் நின்னு
கம்பி திரிய சுத்தி சுத்தி பார்த்து..
அவ சிரிக்க...!!

அந்த மத்தாப்பு வெளிச்சம்
அவகிட்டே தோத்து போனது
எனக்கு மட்டும் தான் தெரியும்.!
அவ அழக போலவே...மனசும் ..!!

ஆசை மட்டும் இருக்கு மனசு நெறய..!ஆனா..
சொல்ல தைரியம் தான் இல்ல..!!

கள்ளி செடில கதிரு..கார்த்தினு
எழுதி வெச்சு..அதுகூட
தூங்குண்ண நாளு நெறய...!!

கணக்கு நோட்டுக்கு போட்ட
அட்டையில எப்பவுமே..அவ பேரு தான்..!

கதிரு..வாடா சரம் வெக்கலாம்னு
முருகவேலு கூப்புட...நா அவள பார்த்துக்கிட்டேவெச்சேன்...
காலோரம் கெடந்த வெடிய பாக்காம..
இப்பவும் இருக்கு அந்த தழும்பு..!!

அந்த தீபாவளி அன்னிக்கு தான் சொன்னேன்..!
கார்த்தி..ஒரு நிமிசம் பேசணும்..! என்ன கதிரு?!

கசங்கிப்போன காயிதத்த அவகிட்டே நீட்ட..
என் கண்ண பார்த்துக்கிட்டே படிச்சா..
கதிரு..! நாம படிக்க நெறய இருக்கு...நல்லா படிக்க பாரு மொதல...!

அப்போ...படிச்சா என்ன கட்டிக்குவிய கார்த்தி..?!
நிக்கல...! போய்ட்டா..!!

அய்யனாறு சிலை ஓரம்
தந்தது ஊரு போய் நேரம் ஆச்சு..!

எங்கப்பனுக்கு வியாபாரம்
என்னவோ வெல்லம்..!
ஆனா மனசுல மட்டும் இனிப்பு இல்ல..!

படிக்க தான் வக்குஇல்ல..!!
தொர..தெரு மேஞ்சு என்பேர கெடுகிரியடானு...அடிச்ச அடி
இன்னைக்கும் நா மறக்கல.. !!!

அண்ணா..அக்கா இத உங்ககிட்டெ
குடுக்க சொல்லுச்சு...!
அவ தம்பி ஒரு காகிதம் தந்தான்..!

"கதிரு..எல்லாம் கேட்டேன்..
ரொம்ப வலிக்குதா?
மனசு வலிக்குது இங்க..! மன்னிச்சுக்க..!!!

எப்படியும் படிச்சுரனும்னு அன்னைக்கு எடுத்தேன்
முடிவ..ஆனா...
விதி வேற மாறி வெளையாடுச்சு..!

அவ அப்பன் வேற ஊருக்கு
மாத்தல் கேட்டு ஊரவிட..
என் நெஞ்சு தண்ணியத்த நெலமா
வெடிச்சுருச்சு..!

ஊர விட்ட அன்னைக்கு கை பிடிச்சு கேட்டா...
என்ன மறக்க மாட்டியே கதிருன்னு.!
கடைசில என்ன விட்டே போயிட்டா...!

அடிச்ச பேய் மழையா
வருஷம் மட்டும் உருண்டு ஓட..!!
இப்பவும் அவ நெனப்பு
இனிப்பா தான் இருக்கு..!

அம்மா ஒரு தரம் சொல்லிச்சு..
கதிரூ.. கார்த்திக்கு கல்யாணம்
ஆகி ரெண்டு புள்ளைகளோட
மெட்ராசுல இருக்காம்ல..!!

ஊர் சுத்தி..கடைசி பெஞ்சு..!
உண்டிவில்லு..ஊதாரி..!!
இன்னைக்கு நா இருக்குறது
அமெரிக்காவுல...Seattle...Microsoft..!!!!
காரணம்..!! கார்த்தி சொன்ன
அந்த ஒரு வார்த்த மட்டும் தான்..!!!

கதிரு..! நாம படிக்க நெறய இருக்கு
நல்ல படிக்க பாரு மொதல...!

Hey Dad..Let's go to watch the fireworks.!
I don't wanna miss the fun..!

ஜன்னலின் பார்வை விட்டு திருப்ப...
என் ஆறு வயசு மகள்...என் உசுரு..!
அவள் முகத்தை பார்த்தேன்..!

அந்த மத்தாப்பு வெளிச்சம்
அப்படியே இருந்தது...!!!!

எழுதியவர் : மாணிக்கம் விஜயபானு (13-Apr-14, 8:46 am)
Tanglish : mathaappu manasu
பார்வை : 304

மேலே