மனதின் எடை---அஹமது அலி----
என் எடை
எனக்குத் தெரியும்
மனதின் எடை
என்ன.?
?
?
என் எடையின்
எத்தனை சதவீதத்தை
அது பெற்றிருக்கும்?
?
?
என்னை விடவும்
எடை மிகையா?
குறையா?
?
?
எப்போதெல்லாம்
எடை மிகும்?
?
?
எப்போதெல்லாம்
எடை குறையும்?
?
?
சுகத்தில் அதன்
எடை?
?
?
சோகத்தில் அதன்
எடை?
?
?
தேவையான
எடை?
?
?
தேவைகளற்ற
எடை?
?
?
வந்து போன
மொத்த எடை?
?
?
தங்கி விட்ட
மிச்ச எடை?
?
?
வந்து வந்து போகும்
எடை?
?
?
வரப் போகும்
எடை?
?
?
அதிகபட்ச தாங்கும்
எடை?
?
?
கூட்டல்
கழித்தல்
பெருக்கல்
வகுத்தல்
?
எதை செய்து
எப்படி கணக்கிட்டால்
என் மனதின்
எடை கிடைக்கும்
எனக்கு விடை கிடைக்கும்?