காத்திருப்பு

நீ குறித்த நேரத்திற்கு முன்பே
தொடங்கி விட்டது
எனக்கான காத்திருப்பு!
துணையாக தென்றலும்,
தேநீர் கோப்பையும்
அருகில்!
நிலைக்கொள்ளாமல்
புரட்டி கொண்டிருக்கிறேன்...
நிஜமென்னும் நினைவை!
அருகில் வைத்திருந்த
அலைப்பேசி
உன் அழைப்பை
எதிர்பார்த்து!
விழிகளோ
நீ வரும் வழிகளை
எதிர்நோக்கி!
காரணங்களை
ஆராய மனமில்லை...
காத்திருப்பும் சுகம்
என உணர வைக்க
உன் நினைவுகள் அருகில்!
முடிவென்று நீ
எதை சொன்னாலும்
ஏற்று கொள்வேன்
என்ற முடிவு மட்டும் மனதில்
ஆழமாய்!
நொடிகள் மட்டும் நகர்கிறது
காரணங்கள் இன்றி
விரைவாய்!
நினைவை துணையாக்கி
வாழ்ந்து விடலாம் என
நீ அளித்த நம்பிக்கை வார்த்தைகள்
வேரூன்றியப்படி...
எத்தனையோ முகங்கள்
தோன்றி மறைகிறது!
முதல்முறை உன்னை பார்த்த
அதே நிமிடங்கள் எந்தன்
கண்முன்னே!
கனவா?? நிஜமா ??
சுதாரித்து எழ....
புன்னகையுடன் எதிர்பட்ட
உன் முகம் சொல்லி விட்டது!!
நம் திருமணத்தின் சம்மதத்தை!