அவள் எனக்கு வேண்டும்-2

"பாட்டி இருக்காங்களா..!",ன்னு கேட்டுக்கொண்டே சட்டென அவனை உரசிக்கொண்டு அவள் உள்ளே வந்தாள்.

“பாட்டி!” என பாட்டியின் காலை தொட்டு வணங்கினாள்.

“ம்… ம்… நல்லாரும்மா… எப்பம்மா வந்த கோமதி? பரிட்சை எப்படி எழுதி இருக்கே?”, என்று கேட்க

“ம்… நல்லா எழுதி இருக்கேன் பாட்டி”, என்றாள் கோமதி.

"பாட்டி! பாட்டி! அப்பா சொன்னாங்க இனிமே நான் படிக்க வேணாமா... நீங்க வந்து சொல்லுங்க பாட்டி.. அப்பதான் அப்பா கேப்பாங்க", என்று சொல்ல
அவளையே கண்களால் கவி எழுதி கொண்டு இருந்தான் கதையின் நாயகன் சிவா.

"சரி! சரி! நான் அப்பாட்ட சொல்றன்.. நீ தொடர்ந்து படி", என்று பாட்டி சொல்ல

"ம் கோமதி! இது என்னோட பேரன்"

"ம் தெரியும் பாட்டி! தோட்டத்துல பார்த்தேன்", என்றாள்.

"அவன் டாக்டர் டி", என்று சொல்லிக்கொண்டே உள்ளே செல்ல

"ஓ அப்படியா"
"ஹலோ! என்னோட பேர் கோமதி.. எனக்கு டாக்டர்ன்னாலே
பயம்", என்றாள்.

"ம்! நான் மாங்கா எடுத்தத உங்க பாட்டிகிட்ட சொல்லலியே...", என்று இழுத்தாள்.

பாட்டி கேட்டுக்கொண்டே "ஏய் கழுதை! வந்ததும் உன்ணோட வேலைய ஆரம்பிச்சிட்டியா?" என்று கை ஓங்கி கொண்டு வர‌

அந்த இடத்தை விட்டு ஓடியே விட்டாள்.

அவளையே பார்த்துகொன்டு இருந்தவன், பாட்டி கொடுத்த டீயை வாங்கிகொண்டு வெளியே போனான்.

பட்டாம்பூச்சிபோல் வந்து விட்டு பறந்து விட்டாளே என்று நினைத்துக்கொண்டு திரும்பியவன் பாட்டி இருப்பதை மறந்து உள்ளே சென்றான்.

"டேய் நில்லு"

"என்ன பாட்டி"

"அய்யாவோட பார்வை சரியில்லையே", என்றாள்.

"உண்மைய சொல்லு", என்று பாட்டி சொல்ல

"பாட்டி அவள தோட்டத்துல பார்க்கும்போது, பாவாடை தாவணியில
பருவப்பெண்ணா தெரிஞ்சா, இப்போ பாவாடை சட்டையில சின்ன‌ப்பெண்ணா தெரியுறா, மனசு என்னமோ பண்ணுது பாட்டி", என்றான்.

"சிவா! இவங்க அப்பாவு,ம் உன்னோட அப்பாவும் நண்பர்கள். உங்கப்பா படிச்சி வெளியூருக்கு போய்ட்டான். இவளோட அப்பா இங்கேயே விவசாயத்தை பார்த்துக்கிட்டு நல்லாதான் இருக்கான். நான் எது சொன்னாலும் தட்ட மாட்டான். உடனேயே கேப்பான். பெரிய பொண்ண கட்டிக்குடுத்து பிரசவத்துக்கு வந்து இருக்கா", என்றாள்.

"இப்ப இவளையும் அவ தாய்மாமனுக்கு கட்டிக் குடுக்கப்போறதா கேள்வி!" என்றாள்.

அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது.

(தொடரும்)

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (17-Apr-14, 6:32 pm)
பார்வை : 597

மேலே