துணிந்து நின்று போராடு

இதயம் துடிக்க மட்டும்!
இயன்றளவு போராடு!
இங்கு வந்த பயன் அறிந்து!
இமயம் தொடப் போராடு!
பலகீனம் உனை வீழ்த்தும்!
பலம் உனை உயர்த்தும்!
படை கொண்டு எதித்திடினும்!
பணிந்து நீ சென்றிடாதே!
முன்னேற பல தடைகள்!
முன்னே வந்துதிக்கும்!
முயல்வதை மிதித்திடினும்!
மனம் தளர்ந்து போகாதே!!
உனை அழிக்க அதிகாரப் பேய்கள்
உன் முன்னே நடமாடும்!
உடைந்து நொருங்கிடாமல்!
உதித்திடு புதுப் பொழிவாய்!
இளமை உனக்கெதிரி
இனங்கிப் பலமிழக்கும்
இசைந்து பின்னே போயிடாமல்!
இரும்பின் உறுதியாய் நில்!
மாயை பல ஆசை காட்டும்!
மையல் கொள்ள உனை அழைக்கும்!
முன்னேற தடை வரினும்
முன்னின்று தடை அகற்று!
வழி தவற பல வழிகள்!
வருந்தியே உனை அழைக்கும்
வளம் இழந்து சென்றிடாமல்
வளம் பெருக பணியாற்று!
கூடுவார் பலர் சேர்ந்து
குதூகளிக்க உனை அணைப்பர்
குலம்இகழப் போயிடாமல்
குத்து விளக்காய் ஔி ஏற்று!
துணிவு இழந்து கோழையாய்
துணி இழந்த மனிதனாய்
தனித்த நிலை வேண்டாமல்
திக்கெட்டும் துணிந்து நின்று போராடு!