சந்தேகம்

நடுநிசி
கும்மிருட்டு
கொட்டும் மழை
பேய்க் காற்று
பளிச்சிடும் மின்னல்
படபடக்கும் சாளரக் கதவு
பயங்கர இடி
பயத்தில் அர்ச்சுனா என்றேன்
யாரவன் என்று
முறைத்தான் என்னவன்
ஒருகணம் திகைத்தேன்
அச்சம் போக்க
அம்மா சொல்லித்தந்தது
பழக்க தோஷத்தில்
வந்தது என்றேன்
சந்தேகமோ அவனுக்கு
மனதிற்குள் சிரித்தேன் ...!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (21-Apr-14, 3:24 pm)
Tanglish : santhegam
பார்வை : 100

மேலே