அவள் எனக்கு வேண்டும்-4

"கொஞ்சம் பரவாயில்லப்பா.. இப்போ தம்பிய பார்க்கவும்.. டாக்டர்ன்னு சொல்லவும் பயந்துட்டாபோல", என்று சொல்ல
டக்கென எழுந்து உள்ளே வந்து விட்டாள் கோமதி.
அக்கா இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு உள்ளே வந்து,
"என்னடி இது? அந்தப்பையன் உன்னப்பார்த்து கண்ணடிக்கிறான். நீ பயந்து போய் உட்கார்ந்திருக்க", என்று அக்கா கேட்க
"தெ தெரிய்ல அக்கா! சும்மா விளையாட்டுக்கு இருக்கும்", என்று அவள் சொல்ல
"இது என்னமோ சரியில்லடி", என்று சொல்லிக்கொண்டே அக்கா சென்றுவிட
இது அவளுக்கே புதுசாகதான் இருந்தது. இதுவரை யாரும் அவளைப் பார்த்து இப்படி கண்ணடித்தது இல்லையே...
பாட்டி குரல் கொடுத்தாள்.. "சின்னவள கூப்புடு"
"பாட்டி", என்றவாறே கோமதி வர
"கோமதி! நீ தொடர்ந்து படி.. உங்கப்பன் கிடக்கறான்", என்று பாட்டி சொல்லவும்,
கோமதி அப்பாவை பார்த்தாள்.
"என்னம்மா.. பாட்டிக்கிட்ட போனாதான் அப்பா ஒன்னும் சொல்லமாட்டேன்னு போய் சொல்லிட்டியா", என்றார்.
சிரித்தாள்.
"சரி சரி படி", என்றார்.
"ஐ!", என்று அப்பாவின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
"ஏய் கழுத எழுந்திரு! என்ன இது! இன்னும் சின்னப்பிள்ளையாட்டம் கழுத்தக்கட்டிக்கிட்டு", என்றாள் பாட்டி.
"ம்! எங்கப்பா நான் கட்டிப்பேன்", என்றாள்.
"ம்! நாளைக்கு தீபம். கொஞ்சம் கோமதிய வீட்டுக்கு அனுப்புப்பா. கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்" என்று அதிகாரமாக சொல்லி விட்டு சென்றாள் பாட்டி.
"தாத்தா! இப்போ எதுக்கு இந்த இடம் வாங்குனீங்க?", என்று கேட்டான் சிவா.
"ம் நீயும் உங்க பாட்டியும் சேர்ந்து ஆஸ்பிட்டல் கட்டரதுக்குதான்", என்றார்.
இரண்டுபேருமே முழிக்க
"அவன் தான் சின்னபுள்ள.. உனக்கு எங்க போச்சி கிழவி அறிவு?", என்றார்.
"தாத்தா பாட்டிய ஒன்னும் சொல்லாதிங்க. நாந்தான்", என்று இழுக்க
"தம்பி! உங்கப்பன சமாளிச்சிடலாம். உங்கம்மாவ எங்களால சமாளிக்க முடியாது சிவா", என்றார்.
"அச்சச்சோ தாத்தா! நீங்க என்ன சொல்றீங்க?" என்றான்.
"எனக்கு என்னப்பா.. எம்பேரன் பக்கத்துலயே இருந்தா சந்தோஷந்தான்"
"அப்புறம் என்ன பாட்டி. எப்படி தாத்தா சம்மதிச்சிட்டாங்க", என்று கத்தினான்.
"டேய் இருடா! எதுக்கு சம்மதிச்சாருன்னு கேளு"
"என்ன பாட்டி சொல்றீங்க?", என்றான்.
சைகையாலேயே அவனை அமைதியாக இருக்க சொல்லி விட்டு
"டேய் கிழவா! ஆஸ்பத்திரி கட்டதானே சம்மதிச்சது", என்றாள்.
"ஆமாண்டி கிழவி! எதுக்கு கேக்குற?" என்றார்.
"ம் பேராண்டி புரிஞ்சுதா?"
"எப்படி பாட்டி இப்படி.. நான் வேற என்னமோன்னு நினைச்சேன்", என்று சொல்லி பொத்தென ஷோபாவில் அமர்ந்தான்.
(தொடரும்)