கவிதையின் தொடர்வண்டிப் பயணம்

கண்களினாலேயே
அவன் கவிதை
எழுதிக் கொண்டுதான் இருந்தான்..,

சற்று கண் மூடி
அதைப் படித்து
இரசித்துக் கொண்டிருந்தேன்.

இடைநின்று தொடர்ந்தது
தொடர்வண்டி..,

சட்டென்று கண்திறந்து ...
தேடினேன் ...
தொலைதூரத்தில்
சிறு புள்ளியாக அவன்...,

அனாதைகளாக்கப் பட்டன ,
நினைவுகளுடன் ,
காலி இருக்கையும்,
அசையும் வண்டியும்.

தேநீர் பருகியபின்
நாவில் ஒட்டியிருக்கும்
சுவைபோல ....இரசிப்பு

கனந்த மனதுடன்
அந்தக் "கவிதை" மட்டும்
எதற்காக பயணிக்கிறது ...
அத்தொடர் வண்டியிலேயே ...?

எழுதியவர் : சங்கரபாண்டி v (22-Apr-14, 11:10 am)
சேர்த்தது : shankarapandy v
பார்வை : 82

மேலே