shankarapandy v - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : shankarapandy v |
இடம் | : Irumbuliyur |
பிறந்த தேதி | : 04-Dec-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 2 |
அமைதியான வாழ்க்கை...
ஏகாந்த வேளையில்
இழுத்தனைத்து
முத்தமிட்டு
சிதை துளைத்து
சிந்தை மயக்கி
தனியோர் உலகில்
எனை தள்ளி விட்டு
மெய் மறந்து
பொய் புகுந்து
சித்தம் கலங்கி
பித்தம் மிகுந்து
மேதாவி நினைப்புடன்
மேதினியில் உலவ விட்டு
எழுத்து தளத்தில்
இரண்டற கலக்க விட்டு
எங்கே சென்றாயடி
என் கவிதை பெண்ணே?
உதிரா கற்பனை
கிடைக்கா கரு
பயங்கொள்ளச் செய்கிறது....
வந்தனைத்து வாழ்த்திச் செல்
கரு கொடு
உயிர் தருவேன்
காகிதத்தில் காவியம் செய்வேன்...
கவிதை மகளே
எனை விலக்கி விட்டாதே.....
எனை அணைத்து முத்தமிடு
இருள் கவியும்
இளமாலை நேரங்களில்
=
ஒளிச்செறியும்
அதிகாலை நேரங்களில்
=
கிட்டப் பார்வைக்கு
எட்டிடும் தொட்டிப் பூக்கள்
=
எட்டப் பார்வைக்கு
கிட்டிடும் தென்னை மரங்கள்
=
தென்னங் குரும்பை
கொறிக்கும் அணில்கள்
=
மகிழம்பூ மரத்தில்
மகிழ்ந்திருக்கும் தேன்சிட்டுகள்
=
மாடத்தில் கூடுகட்டி
குடியேறும் சிட்டுக் குருவிகள்
=
மின் மரத்தில் பூத்திருக்கும்
கரும் காகப் பூக்கள்
=
சாளரம் வழி எப்போதும்
ஊடுருவும் ஈக்கள்
=
மசூதி மினராக்களில்
படபடக்கும் மாடப்புறாக்கள்
=
பக்கத்து வீட்டு பாப்பாவின்
பூனை அழுகுரல்
=
தெருவிலோடும் சிறுவர்களின்
விளையாட்டு ரயில்
=
எங்கிருந்தோ வந்து
மேனி போர்த்த
மழை வருகிறது
வெளியில் வாருங்கள்
மனங்களை கழுவ....
சாதிமத பேதமின்றி
சமத்துவம் பாராட்டும்
நீதிதேவதைகளை
பாருங்கள்!
காதல் உணர்வை
தட்டி எழுப்பி
கட்டி இழுக்கும்
நீர்கயிருகளை கொண்டு
இதயம் இணைக்க முயலுங்கள்!
வானின் மோனதவத்தால்
ஞான வரமாய்
பூமி பெற்ற
அருள்துளிகளால்
கறைபட்ட உள்ளத்தை
கழுவுங்கள்!
குழந்தைகள் கட்டிவைத்த
குட்டிக்காகித கப்பல்களை
கரைசேர்க்க வந்த
உயிர்துடுப்புகளுக்கு
உற்சாக வரவேற்பு தாருங்கள்!
விவசாயிகளின்
கண்ணீரைத் துடைக்க
வானிலிருந்து நீண்ட
தண்ணீர் விரல்களுக்கு
தங்க மோதிரம் அணிவியுங்கள்!
தாவரயினத்திற்கு
தன்னையே தாரைவார்த்து
மண்ணை
பாலிவுட் செல்கிறார் யுவன்ஷங்கர் ராஜா!
இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறி கடந்த சில மாதங்களாக பரபரப்பு வளையத்திற்குள் சிக்கிய இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா, அதே பரபரப்பு சூழ்நிலையினால், வடகறி படத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பாடல் கொடுக்க முடியாததால் அப்படத்திலிருநதும் தன்னை விலக்கிக்கொண்டார்.
அந்த நேரத்தில் யுவனுக்கு தற்போது பாலிவுட் படங்களில் இசையமைக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதனால் சில கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையில் இருக்கிறார். அதனால் தமிழில் அவர் அதிக ஈடுபா (...)
சொன்னதிலே உண்மை இல்லையா? ஆயினும்
உன் சொல்லதனில், நன்மை உள்ளதா?
வாய்மை இல்லாத சிலதும் கூட நன்மை தரும் அடுத்தவர்க்கென்றால்
பொய்மை சொல்லவும் நீ துணிந்திடலாம், தயங்காமல் சொல்லிடலாம்
குறள் வரியும் வலியுறுத்துவது சில பாக்களிலே இந்த கருத்தையே
போர் முனையில், தர்மனும் பொய் சொன்னான்
அசுவத்தாமன் இறந்ததாக, தர்மம் ஜெயிப்பதற்க்கே
சொன்னதிலே உண்மை இல்லையெனினும்
சொல்லதனில் நன்மை இருந்தால், சொல்லிடலாம் நீயும் பொய்மையே
கண்களினாலேயே
அவன் கவிதை
எழுதிக் கொண்டுதான் இருந்தான்..,
சற்று கண் மூடி
அதைப் படித்து
இரசித்துக் கொண்டிருந்தேன்.
இடைநின்று தொடர்ந்தது
தொடர்வண்டி..,
சட்டென்று கண்திறந்து ...
தேடினேன் ...
தொலைதூரத்தில்
சிறு புள்ளியாக அவன்...,
அனாதைகளாக்கப் பட்டன ,
நினைவுகளுடன் ,
காலி இருக்கையும்,
அசையும் வண்டியும்.
தேநீர் பருகியபின்
நாவில் ஒட்டியிருக்கும்
சுவைபோல ....இரசிப்பு
கனந்த மனதுடன்
அந்தக் "கவிதை" மட்டும்
எதற்காக பயணிக்கிறது ...
அத்தொடர் வண்டியிலேயே ...?