Tamilsathish - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Tamilsathish |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 01-Feb-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 248 |
புள்ளி | : 53 |
நான் ஒரு பொறியாளராக இன்போசிசில் வேலை பார்க்கிறேன்..எனக்கு கவிதை எழுதுவது மிகவும் புடிக்கும் பாடல் ஆசிரியராக ஆகுவதே என் கடமை
நெஞ்சிலே பதிந்து கிடக்கும் ஆற்றலே
உன் இலக்கிற்கு அதுவே ஊற்றாலே
வீண் எண்ணங்களில் அலை பாயும் மனமே
ஏன் கண்களில் இன்னும் ஈரமே
எங்கே மறைந்து போயின ஆன் மகனுக்கான வீரமே
இன்னும் எத்தனை காலங்கள் இந்த பாரமே
காக்க வேண்டும் உன்னுடைய மானமே
உன் எல்லையாக அடைய வேண்டும் அந்த வானமே
தேவதை தவறி
தேநீர் கோப்பாயில்
விழுந்தாள் ;
தேநீர் மறந்து
தேவதையை
பருகித் தொலைத்தேன் ;
மாவிலையொன்று
தேயிலைக்குள்
மறைந்தது ;
தேயிலையெல்லாம்
என் வீட்டுத்
தோரணமானது;
அருகில் வருகிறாள்
தாய் மொழி மறந்தது ;
மெழுகாய் சிரிக்கிறாள்
உயிர்ப்பூ மலர்ந்தது ;
ஆம் மலர்ந்தது .
சாதிக்க துணிந்து விட்டோம் -கயல்
மலையும் மண் புழுவாகும்
ஆழ்கடல் நீர் அரைசாண் ஆகும் .
வானம் குடை பிடிக்கும்
புயலும் பூ தூவிச் செல்லும் .
தடைகளை உடையாக்கி
தன்மானத்தை உணவாக்கி
சாதிக்க துணிந்து விட்டோம்
இனி போதிமரம் தேவை இல்லை
போர் முரசின்றி
உயிர் பறிக்கும் யுத்தமின்றி
உலகை வெல்ல போகின்றோம்
உண்மை எனும் வாள் ஏந்தி .
அகிம்சை இல்லை
இங்கு
இம்சையும் இல்லை
எதிர்த்து நிற்கும் திறனும்
எழுதுகோலையும் தவிர
எமக்கென்று எதுவும் இல்லை .
இருப்பினும்
மாற்றுவோம்
எழுத்தினால்
தலைஎழுத்தை மட்டும் அல்ல
தரணியையும் ..
ஆம் நாம் எழுத்தாளர்கள் .!!!!!
இனிமையான உன் தூரல் பார்வையால்
என் தோள்கள் இதமாய் இசை பாட !
இசையின் ஒலியிலே என் இமைகள்
இதமாய் கவி பாட !
கவியின் இனிமையிலே என் கண்கள்
அழகாய் நடனமாட !
நாட்டியத்தின் அழகினிலே
என் நெஞ்சம் நிலை தடுமாற !
உன் மின்சார மின்னலின் பார்வையிலே
என் கண்கள் நிலைமாற !
உன் கடிகார இடியின் ஓசையினிலே
என் செவிகள் மென்மையாய் மாற !
என் பிஞ்சு நெஞ்சை உன்னிடம் பறி கொடுத்தேன்
பாவியேன் !!!!!!!
வாழ்த்துகள் ?
வாழ்த்துக்கள் ? - எது சரி ?
நேசிக்க மறந்தேன் உன்னை
சுவாசமே சுமை என உணர்த்தினாய் !!
படிக்க மறந்தேன் உன்னை
பாதையை மறக்க வைத்தாய்..
ரசிக்க மறந்தேன் உன்னை
வசிக்க காரணத்தை மறுத்தாய் ..
வீழ்ந்தே கிடந்த என்னை
மீண்டும் மீண்டும் எழ வாய்ப்பை தந்தாய் !!
இன்று செடியாய் வளர ஆரம்பித்திருக்கிறேன்
நீயோ என்னுள் இதமாய் இனிக்கிராய்
உன் பாடங்களோ பாதையை இனிமையாய் விளக்குகிறது ...
நேசிக்கிறேன் உன்னையே..
சுவாசிக்கிறேன் உன்னையே...
நம்மை பற்றி எதுவுமே தெரியாதவரை நண்பனாக இருப்பார்கள்......!
எல்லாமே தெரிந்த பின்பு துரோகியாகி விடுவார்கள்......!
-கூடா நட்பு.
ஒருவர் : சார் மனுஷங்களால எல்லா விஷயமும் செய்ய முடியாது .
மற்றொருவர் : அது என்ன சார் மனுஷனால முடியாதது? சொல்லுங்க நான் செய்து பாக்கிறேன் ..
( நீங்க கூட முயற்சி செய்யலாம் ).
1. நம்ம முதுக நாமே பாக்க முடியாது.
2. நம்மள நாமே தூக்க முடியாது
3. கை கட்ட விரலை கொண்டு நடுவிரலை கையின் பின்பக்கமா வளச்சி இரு முனையையும் தொட முடியாது.
4. ரெண்டு கண்ணையும் வேற வேற பக்கம் பாக்க வைக்க முடியாது .
5. நாக்க உள்பக்கமா மடக்க முடியாது ....
...
..
...
...
..
..
..
...
...
...
...
...
...
...
..
...
...
...
...
...
...
...
...
..
...
..
..
...
,.,
போதும் போதும்..
காதல்
அது இதயம் எனும் வானிலே தோன்றும்
ஒரு தூரல்
காதல்
அது சுய நினைவையும் இழக்க செய்யும்
மந்திர பாடல்
காதல்
அது சொல்லால் குத்தினாலும் உயிர்
போகும் என்று புரிய வைக்கும்
ஒரு மோதல்
காதல்
அது அன்பாய் அனைவரையும் ஈர்த்தாலும்
ஆயுதம் இல்லாமலே வலிக்க வைக்கும்
ஒரு சாரல்
பச்சை பசேலென எப்போதும் பறவைகளின் கீச் கீச் என்ற சத்தத்துடன் ஒரு அடர்ந்த காடு.
இந்த காட்டிலே ஒரு காகமும் கொக்கும் இணை பிரியா நண்பர்கள் .இரவு ஆனால் காக்கை தன் வீட்டிற்கும் கொக்கு தன் வீட்டிற்கும் சென்று விடும்.
பகலிலே கதிரவன் தன் கண்களை திறந்தவுடன் இரண்டும் ஆடி பாடிக்கொண்டு காட்டின் நடுவே உள்ள குலத்திற்கு செல்வது வழக்கம் .கொக்கு இந்த குளத்தில் உள்ள மீன்களை உண்பதற்காக
அங்கு செல்லும்.
காக்கை கொக்கிற்காக அங்கு உள்ள மரத்திலே அமர்ந்து கொள்ளுமாம் ...
இப்படியாக சில காலங்கள் சந்தோசமாக கொக்கும் காக்கையும் திரிந்தன ..
ஒரு நாள் கொக்கு மீனின் வரவை எதிர்பாத்து காத்துக்கொண்டிருந்தது காகம் கொக்
வலிகளிலே சிக்கிய உனக்கு
இலக்கு என்ற ஒன்றை விதைகளாக்கு
இரவினிலே
விண்ணில் அற்புதமாய் எரியும் விலக்கு
அது உலகிற்கே ஒரு கலங்கரை விலக்கு
உன் உள்ளத்திலே எரியும் இலக்கு
அதைவைத்து இமயம் போல் உன்னை
உயர்த்துவதே உன் குறிக்கோள்கல் ஆக்கு
உறவுகள் உன்னை விட்டு விலகினாலும்
என்றும் விலகா தன்னம்பிக்கையை
உனக்கு தலைவனாக்கு
முடிந்தவைகள் எல்லாம் கனவுகள் என நினைத்து
கனவுகளை எல்லாம் முடிக்க
மனதிலே வீரத்தை ஓவியங்கலாக்கு
நேற்று ஒரு கட்சியிலே வாக்கு கொடுப்பான்
இன்று ஒரு கட்சியிலே வாக்கை
நிறைவேற்ற இல்லையென நேற்றைய அவன் கட்சியை பழித்துறைப்பான்
நாளை ஒரு கட்சினிலே வாகு சேகரிப்பான்
நேற்றைய அவன் கட்சியில் கொடுத்த வாக்கெல்லாம்
இன்றைய கட்சியில் குறைகளாய் மாறி போகுதடா !
குறையே இவன் தான் என தெரியாத
மக்கள் உள்ளம் திரும்ப திரும்ப
அவனையே நாடுதடா !
உண்மையை கூறினாலும் பணத்தை வாங்கி
நல்லவர்களையும் உலகம் பகைக்குதடா !
அவன் மாடி மாடியாய் கட்டத்தான்
மயக்குகிறான் என கூறினால்
என்னையும் முறைக்குதடா .
என்றைக்குதான் முடியுமோ இந்த கொள்ளையர்களின் கூட்டாச்சி
வாரி வாரி கொடுத்த
மன்னர் ஆட்சி கூட மீண்டும்
வந்தால