Paul - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Paul |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 669 |
புள்ளி | : 344 |
சபிக்கப்பட்ட அன்றைய தினத்தில்
களவு போன என் கனாக்களைத் தேடி
தவித்துத் துடிக்கும் உள்ளத்தைத் தேற்றிட
வெளுக்கப்பட்ட தெருக்களில் நடந்தேன்.
ஒளிராமல் ஒளிரும் மின்விளக்கொளியில்
தோலுடன் உளுந்து கொட்டிக் கிடப்பதாய்
வண்டுகள் இறந்து கிடப்பதைக் கண்டேன்.
தட்டி கவனத்தை தம்பால் ஈர்த்திட்ட
வெட்டுக் கிளிகளும் வீணே பறந்து.
நெட்டைத் தூண்களைக் கடந்து கம்பிக்
கால்களால் மங்கிடும் குழல் விளக்கினை
நெட்டித் தள்ளிடும் முயற்சியில் தோற்று
’டிக்டிக்’ நொடிகளை மெல்ல நகர்த்தின.
.ஏதோ ஒன்று இன்று நடக்கப் போகிறது
என்ற எனது உள்ளுணர்விற்குப் பதிலாக
இடியோசை முணுமுணுப்பாய் காதில் வீழ
நடிப்பது எனக்கும் கொஞ்சம் தெ
மணல் துகள்களின் மீது
பதிந்த பாதங்களில்
உள்ளோடிய இளம் சூட்டில்
வழிந்து ஓடும்
கருமேகங்கள் நெருங்கிய
நிலவின் இடரில்
வெள்ளொளி பாய்ச்சும்
அதன் வேகத்தில்
இரு தென்னைகள்
காய் கோர்த்த
கிளைக் காதலில்
உன் விரல்
ரேகைகளின்
கால ஸ்பரிசங்களில்
தோற்றுப் போகும்
நான் உயிர்த்த
ஜென்மங்கள்!
ஒரு பார்வை பார்த்தால்
கண்கள் கதை பேசிடுமா ?
கண்கள் பேசும் மொழி
புரியாவிடில் பார்வையின்
அர்த்தம் காதலாகுமா ?
ஓரக் கண் பார்வையில்
வில்லங்கம் இருக்குமா ?
ஒரு நொடிக்கு
பல தடவை திரும்பிப்
பார்த்ததன் அர்த்தம்
விளங்குமா ?
விளங்காவிடில் அவன்
என்னைப் பார்க்கையில்
நானும் ஏன் பார்க்கிறேன் ?
என் பார்வையின் அர்த்தம்
அவனுக்கு புரிகிறதா ?
நான் ஒழிந்து பார்ப்பதும்
அவன் எட்டிப் பார்ப்பதும்
கண்ணாம்பூச்சு விளையாட்டா ?
விளையாட்டெனின்,
பார்வையின் விளையாட்டு
வினையாகுமா ?
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
அவற்றைத் தெரிந்து கொள்வோம்.
அ __எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா (...)
ஏதோ சொல்ல துடிக்குது மனசு
ஏனோ மெல்ல மறைக்குது இன்று
தெருவோரச் சருகோடு
தினம் பேசும் என் காதல்
நிதம் தீண்டும் தென்றலாய் உன்
நித்திரையோடு சிரிக்காதா...?
உருகி மருகி துடிக்குது மனசு
உண்மை பேச விரும்புது இன்று
மலரோடு முள்ளாக
மன்றாடும் என் காதல்...
மணம் வீசி அழகாக உன்
மடிமீது தவழாதோ...?
அன்பை சொல்ல விரும்புது மனசு
ஆறுதல் தேடி தவிக்குது இன்று
அரளிப்பூவை அள்ளியணைத்து
அழுது துடிக்கும் ஆசைக்காதல் உன்
அழகு நெஞ்சம் தொட்டு
ஆயிரம் கதைகள் சொல்லாதா.?
எழுதி முடித்த என் கவியின்
எழுத மறந்த வரிகளாய் !
ஏனோ இன்னும் என்னை
ஏமாற்றிக் கொண்டே இருக்கிறாள் !
ஏற்கிறேன் எம்மாற்றமும்
இல்லாமல் !
என்றாவது மாற்றம் வரும் என்று !
நிலவுக்கோர் முத்தம் கொடுத்தேன்.
நாணத்தால் என் பின்னால் ஒளிகிறாள்.
அலைபேசியில் அவள் சுவாசம் கூட
ஆயிரம் கவிதைகள் பேசும் மெளனமாய்....,
களியாலான என் யாக்கையை
உளி எனும் நினைவுகளால் உடைக்கிறாய்.
அவள் இதழில் தான் புன்னகைக்கும்
சிரிப்புக்கும் வித்தியாசம் கண்டறிந்தேன்.
கடைக்கண்ணால் பார்க்காதே!!
அய்யோ..!!!இவள் பார்வைக்கு மருந்தென்ன.?
உன் இதழில் ஓர் மச்சமடி
நீ என் உயிரில் கலந்த எச்சமடி.
என் நிழலெனும் கண்ணாடியில்
உன் தெய்வீக முகத்தை காண்கிறேன்.
உன் காதலெனும் மனச்சோலையில்
நான் காதல் மலராய் பூக்கிறேன்.
தலை நிமிர்ந்து பாராத உன் முகத்தினில்
கவிதைகளில் பருக்கள் கொடுத்து ரசிக்கிறே
மண் தன் கண்ணான பொன்னென
மானம் காத்த என் அப்பனின் தாத்தன்.
மறத்தமிழன் நான் என மார்தட்டி சூழ் உரைத்த என் தாத்தன் .
பறந்து போயினர் விண்ணோடு இல்லை நீங்கள்
மடிந்து கிடப்பீர் மண்ணோடு .
பார்போற்றும் என்இனம் பகடை காயாய் போய்விட
ஆட்டிப்பார்க்க நினைகின்றாய்
அடக்கி தான் வைக்கின்றாய் .
அட மூடனே ..
புலிக்கு பிறந்தது பூனையல்ல
பாய்ந்திட கற்றுக்கொடுக்க தேவையல்ல .
பதுங்கி வாழ்வது பயந்தல்ல
பலி தீர்க்கும் நாள் இன்றல்ல .
மகாபாரத போர் இதுவல்ல
சதிக்கு இங்கு வேலையில்லை
சுதந்திர தமிழன் நான் -என்னை
துகிலுரிக்க எவனும் பிறக்க வில்லை .
இனவெறி எனக்குள் துளியும் இல்லை -என் இனமழித்தால் பகைவர
D N A
மனிதனின் குணத்தை
தீர்மானிக்கும் இரு கயிறுகள்
கடவுளின் தாயக் கட்டைகள்..!
நாட்டு
விலைவாசியை எண்ணி
பிச்சைகாரனின் பாத்திரம்
சிரித்தது
சில்லறையை
சிதற விட்டது போல.....!
பணக்காரனின்
காணிக்கையை எண்ணி
குடிசை ஆலயம்
சிரித்தது
சில்லறையை
சிதற விட்டது போல.....!
கண்டக்டரின்
பதிலை எண்ணி
டிக்கேட் பணப்பை
சிரித்தது
சில்லறையை
சிதற விட்டது போல.....!